உலகம் சிறக்க (The ideal world)
வெண்பா 2 - 12 அடிகள் வரை 11 வகை எல்லை வரையறைகள் கொண்டது வெண்பா அதில் மிக மிக சிறிய அடி வரையறை கெண்டது குறள் வெண்பா (2 அடி).
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின். - 17
Even the wealth of the wide sea will be diminished, if the cloud that has drawn (its waters) up gives them not back again (in rain).
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர். - 1033
They alone live who live by agriculture; all others lead a cringing, dependent life.
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும். - 1037
If the land is dried so as to reduce one ounce of earth to a quarter, it will grow plentifully even without a handful of manure.
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின். - 225
The power of those who perform penance is the power of enduring hunger. It is inferior to the power of those who remove the hunger (of others).
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை. - 656
Though a minister may see his mother starve; let him do not act which the wise would (treat with contempt).
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். - 619
Although it be said that, through fate, it cannot be attained, yet labour, with bodily exertion, will yield its reward.
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின். - 218
There is no need of a shaven crown, nor of tangled hair, if a man abstain from those deeds which the wise have condemned.
தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்.
The base resemble the Gods; for the base act as they like.
கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல். - 925
To give money and purchase unconsciousness is the result of one's ignorance of (one's own actions).
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து. - 490
At the time when one should use self-control, let him restrain himself like a heron; and, let him like it, strike, when there is a favourable opportunity
இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அஃதொப்ப தில். 621
If troubles come, laugh; there is nothing like that, to press upon and drive away sorrow.
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர். 623
They give sorrow to sorrow, who in sorrow do not suffer sorrow.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல். - 517
After having considered, "this man can accomplish this, by these means", let (the king) leave with him the discharge of that duty.
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள. - 527
The crows do not conceal (their prey), but will call out for others (to share with them) while they eat it; wealth will be with those who show a similar disposition (towards their relatives).
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது. - 481
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று. - 941
வாதம் பித்தம் சிலேத்துமம்
If (food and work are either) excessive or deficient, the three things enumerated by (medical) writers, flatulence, biliousness, and phlegm, will cause (one) disease.
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின். - 942
No medicine is necessary for him who eats after assuring (himself) that what he has (already) eaten has been digested.
பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர். - 580
Those who desire (to cultivate that degree of) urbanity which all shall love, even after swallowing the poison served to them by their friends, will be friendly with them.
கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை. - 765
That indeed is an army which is capable of offering a united resistance, even if Yama advances against it with fury.
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு. - 597
The strong minded will not faint, even when all is lost; the elephant stands firm, even when wounded by a shower of arrows.
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து. - 1082
This female beauty returning my looks is like a celestial maiden coming with an army to contend against me.